Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாமக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல்?

Advertiesment
பாமக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல்?
, சனி, 6 மார்ச் 2021 (10:30 IST)
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 23 தொகுதிகளை பெற்றுள்ள நிலையில் அந்த தொகுதிகளின் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தி 23 தொகுதிகளை பெற்ற பாமக, இன்று காலை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது என்பதை பார்த்தோம் . அதிரடி அறிவிப்புகள் இருந்த அந்த தேர்தல்அறிக்கை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பாமக நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகள் எவை எவை என்பது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் . சென்னையில் உள்ள தனியார் ஸ்டார் ஓட்டலில் திமுக மற்றும் பாமக நிர்வாகிகள் இது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். பாமக சார்பாக ஜிகே மணி, ஏகே மூர்த்தி, பாலு உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

அதையடுத்து அவர்கள் இப்போது விருப்பமுள்ள தொகுதிகள் என ‘திருப்போரூர், விக்ரவாண்டி, செங்கல்பட்டு, சங்கராபுரம், கும்மிடிப்பூண்டி, ஆரணி, பெண்ணாகரம், காட்டுமன்னார் கோயில், வீரபாண்டி, அனைக்கட்டு, ஓசூர், நெய்வேலி, கலசப்பாக்கம், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர்,குன்னம், திண்டிவனம், பன்ரூட்டி, ஜெயங்கொண்டம், மேட்டூர், ஆற்காடு, வேளச்சேரி’ ஆகிய தொகுதிகளைக் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணுக்குத் தெரியாமல் மிரட்டும் இமயமலையின் பெரிய ஆபத்துகள்