Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக தோல்வியை எதிர்பார்க்கும் பாமக?

Advertiesment
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக தோல்வியை எதிர்பார்க்கும் பாமக?
, புதன், 23 அக்டோபர் 2019 (07:51 IST)
விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதுவரை வெளிவந்த கருத்துக் கணிப்பின்படி இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி வன்னியர்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெறுவதை பாமக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பல உள்ளாட்சி தொகுதிகளை அதிமுகவிலிருந்து கேட்டுப்பெற பாமக திட்டமிட்டுள்ள நிலையில், இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றால் அதிமுகவின் செல்வாக்கு உயரும் என்று பாமக கருதுவதாக கூறப்படுகிறது
 
எனவே இந்தத் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்தால் தன்னுடைய எண்ணம் ஈடேறும் என பாமக நினைப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் வன்னியர்களின் ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ் என்ற இமேஜை உடைக்க வேண்டும் என்றும் வன்னியர்கள் அதிகம் இருக்கும் தொகுதியிலேயே அதிமுக தனது செல்வாக்கை நிருபிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த தொகுதிகளில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த அதிமுக அமைச்சர் ஒருவர் தீவிரமாக வேலை செய்ததாகவும், இந்த தொகுதியில் அதிமுக வெற்றிக்காக அவர் பணத்தை தண்ணீராக செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல கிரிக்கெட் வீரர் சித்து மனைவி எடுத்த அதிரடி முடிவு