Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 4 April 2025
webdunia

திமுக கூட்டணியில் பாமக இருந்தால் விசிக இருக்காது: திருமாவளவன்

Advertiesment
திமுக
, ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (17:45 IST)
பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளதால் மீண்டும் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக, பாஜக வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த கூட்டணியை முறியடிக்க திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பாமகவை இந்த கூட்டணியில் இணைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்பு இல்லை என்றும், அப்படியே கூட்டணியில் பாமக இணைந்தால், பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்று திருமாவளவன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

webdunia
ஏற்கனவே திமுக கூட்டணியில் விசிக இல்லை என்று பகிரங்கமாகவே துரைமுருகன் அறிவிப்பு செய்ததற்கே இன்னும் விடை கிடைக்காத நிலையில் திமுக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்பில்லை என்று திருமாவளவன் கூறியதற்கு திமுகவினர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 22 ஆவது பட்டமேற்பு விழா