Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் – 100 நாள் செயல்பாடு எப்படி ?

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் – 100 நாள் செயல்பாடு எப்படி ?
, சனி, 8 டிசம்பர் 2018 (12:45 IST)
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று இன்றோடு 100 நாட்கள் முடிவடைந்துள்ளது.

வாக்கரசியலில் பங்கேற்கும் நோக்கத்தோடு திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து திராவிடர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை அண்ணா தொடங்கிய போது, என்றுமே நமக்குத் தலைவர் தந்தை பெரியார்தான் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், திமுகவில் தலைவர் என்ற பதவியையும் காலியாகவே வைத்திருந்தார்.

அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்புகளையும் பிரிவினையும் களைய கலைஞர் கருணாநிதி தலைவர் பதவியில் பொறுப்பேற்றார். ஆரம்பத்தில் இது விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் , காலப்போக்கில் அனைவரும் கலைஞரைத் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.

அன்றிலிருந்து கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் திமுக வின் தலைவராக செயல்பட்டார் கலைஞர். ஆட்சியில் இருந்த போதும் ஆட்சியில் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் மிகவும் தீவிரமாக இயங்கி கட்சியையும் கட்சி உறுப்பினர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். கட்சியில் ஏற்படும் பூசல்களை யார் மனதும் புண்படாத வண்ணம் உடனடியாக தீர்த்து வைத்து கட்சியினை சிறப்பாக வழிநடத்தினார்.

கலைஞர் இறந்த பின்பு திமுக வின் இரண்டாவது தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின். அவர் தலைவராகப் பதவியேற்று இன்றோடு 100 நாட்கள் முடிவடைந்துள்ளது. அவர் தலைவராகப் பதவியேற்றப்பின் சட்டமன்றத்திலும், களத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றாலும் அவர் இன்னும் அதிக தூரம் செல்லவேண்டியது இருக்கிறது.

இன்னும் சட்டசபைத் தேர்தலுக்கு 3 ஆண்டுகள் இருப்பதால் கடினமான உழைப்பின் மூலமே அடுத்த தேர்தலில் திமுக வால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை கட்சி உறுப்பினர்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. மேலும் வலிமை குறைந்த இந்த அதிமுக ஆட்சியை அவரால் கலைக்க முடியவில்லை என்ற விமர்சனமும் அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிகளவில் வெற்றி பெற்று கட்சியினை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பும் அவர் முன் இருக்கிறது. இதையெல்லாம் உணர்ந்து செயல்படும் பட்சத்தில் அவர் இன்னும் சிறந்த தலைவராக உருவாக முடியும்… வாழ்த்துக்கள் திமுக தலைவர் ஸ்டாலின்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருகிறது ”பேய்ட்டி” புயல்? சென்னையை தாக்கும் என கணிப்பு