Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எடப்பாடியாரை சந்தித்த பாமக எம்.எல்.ஏ.. உறுதியாகிறது அதிமுக – பாமக கூட்டணி? – நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

Advertiesment
Edappadi Ramadoss

Prasanth Karthick

, ஞாயிறு, 17 மார்ச் 2024 (17:51 IST)
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் கூட்டணியை உறுதி செய்வதில் அதிமுக – பாமக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.



நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை பல கட்டங்களாக நடத்துவதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் இன்னமும் தமிழகத்தின் இரண்டு பெரிய மாநில கட்சிகளில் ஒன்றான அதிமுக தனது கூட்டணி குறித்து அறிவிக்காமல் உள்ளது.

பாமக மற்றும் தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வரும் நிலையில் நாளைக்கு மொத்த பேச்சுவார்த்தையையும் முடிக்க கட்சிகள் தீவிரம் காட்டத்தொடங்கியுள்ளன. இந்நிலையில், இன்று பாமக எம்.எல்,.ஏ அருள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருபக்கமும் சாதகமான சூழல் ஏற்பட்டு வருவதாகவும், நாளை கூட்டணி குறித்த முக்கியமான அறிவிப்பை அதிமுக வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் பணிகளை மற்ற கட்சிகள் தொடங்கிவிட்ட நிலையில் அதிமுக இழுபறி கட்சி தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், நாளைக்கு கூட்டணியை அறிவித்து பணிகளை அதிமுக தொடங்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்பானி திருமண விழாவில் திருச்சி திருடர்கள் கைவரிசை! – டெல்லியில் அதிரடி கைது!