பாஜக கூட்டணியில் பாமக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தேமுதிகவும் பாஜக கூட்டணிக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அதிமுக கூட்டணியில் ஒரு கட்சி கூட இணைய விருப்பம் தெரிவிக்காததை அடுத்து அந்த கட்சிக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது இடம் தான் கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாஜக மற்றும் பாமக கடந்த சில நாட்களாக கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை நடத்தி வந்த நிலையில் தற்போது பாமகவுக்கு பத்து தொகுதிகள் ஒதுக்க பாஜக ஒப்புக் கொண்டிருப்பதாகவும் பாமக எம்பி ஒருவர் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவும் உறுதி செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாமக, பாஜக கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது
அதிமுக கூட்டணியில் எந்த ஒரு பெரிய கட்சியும் இணையாத நிலையில் தேமுதிகவும் அந்த கூட்டணியை ஒதுக்கிவிடும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தேமுதிகவும் பாஜக கூட்டணியில் இணைந்து விடும் என்றே கூறப்பட்டு வருகிறது
இதுவரை ஒரு பெரிய கட்சி கூட அதிமுகவிடம் கூட்டணி கொடுத்த பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில் அந்த கட்சி கிட்டதட்ட தனித்து போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளதால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு விடுமோ என்ற நிலை இருப்பதாக அரசியல் விமர்சனங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.