Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக-வை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டீர்களே? - K.C.பழனிசாமி

Advertiesment
admk office

Sinoj

, புதன், 13 மார்ச் 2024 (18:12 IST)
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ்  உள்ளிட்ட தேசிய கட்சிகளும்,  திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி,  உள்ளிட்ட பல்வேறு  மாநில கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
இன்னும் ஒருசில நாட்களில் அதிமுக யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது அறிவிக்கப்படும் என தெரிகிறது.
 
இந்த   நிலையில், இன்று நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக  புலிகள் கட்சியுடன் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
 
இதில் ஒரு தொகுதியில் போட்டியிட உறுதியாக கேட்டு வருவதாகவும், ஆயினும் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்கிறது என்று மன்சூர் அலிகான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
 
இதுகுறித்து  அதிமுக முன்னாள் எம்பி.,கே.சி.பழனிசாமி,
 
''எல்லா கட்சிகளும் அதிமுக-வுடன்  கூட்டணி அமைக்க ஏங்கி தவம் இருந்த நிலையில் இருந்த அதிமுக-வை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டீர்களே? 
 
எடப்பாடி பழனிசாமி நாமக்கல் பொதுக்கூட்டத்தில் மெகா கூட்டணி அமைப்பேன் என்று  முழக்கமிட்டது  இதற்கு தானா?
 
கே.பி.முனுசாமி தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கும் போதே அவரால் ஓ.பி.எஸ் என்ன கதிக்கு ஆளானார் என்பது உங்கள் நினைவுக்கு வரவில்லையா?'' என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

26 வருடத்தில் அலுவலகத்திற்கு ஒரே ஒரு முறை விடுப்பு எடுத்த நபர்!