விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? டாக்டர் ராமதாஸ் விளக்கம்..!

Mahendran
வியாழன், 12 ஜூன் 2025 (12:00 IST)
"விஜய் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையா?" என்ற கேள்விக்குப் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
 
தமிழகத்தில் அதிமுக, திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என மூன்று கூட்டணிகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விஜய், அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்வாரா அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய் தனித்துக் கூட்டணி அமைத்தால், அந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி  மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும், அதுமட்டுமின்றி வேறு சில சிறிய கட்சிகளும் இணைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, "அப்படி எந்தப் பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை," என டாக்டர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். இப்போதைக்கு கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றாலும், இன்னும் சில மாதங்களில் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

தனியார்களை நம்பி, அதுவும் 2 நிறுவனங்களை மட்டும் நம்பினால் இப்படித்தான்.. இண்டிகோ விவகாரம் குறித்து எச்சரிக்கை..!

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடரும்: இன்று கனமழைகு வாய்ப்பு எங்கே?

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் கோரிக்கை மாநிலங்களவையின் நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments