Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

Siva
வியாழன், 12 ஜூன் 2025 (11:23 IST)
கடந்த மூன்று நாட்களாகப் பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே வந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், இன்று திடீரென மீண்டும் பங்குச்சந்தை சரிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று 260 புள்ளிகள் சரிந்து 82,310 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 75 புள்ளிகள் சரிந்து 25,066 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, சன் பார்மா, டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், டைட்டன், டிசிஎஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க், மாருதி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலைகள் குறைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments