Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி பிறந்தநாளில் வாழ்த்து கூறிய டாக்டர் ராமதாஸ்.. திமுக கூட்டணிக்கு செல்கிறாரா?

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (13:15 IST)
கருணாநிதி பிறந்தநாளில் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து கூறிய நிலையில் அவரது பாமக கட்சி, திமுக கூட்டணிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று தொடங்கவிருக்கும் நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: 
 
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், எனது நண்பருமான முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா தொடங்கும் இந்த நாளில் சமூக முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பணிகளை நினைத்துப் பார்க்கிறேன்.  
 
தந்தைப் பெரியார் வகுத்துக் கொடுத்தப் பாதையில் அறிஞர் அண்ணா விட்டுச் சென்ற பணிகளை கலைஞர் திறம்பட மேற்கொண்டதால் தான் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர்வும், உரிமைகளும் கிடைத்தன. அவரது உழைப்பு அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடம்.   
 
கலைஞரின் உழைப்பையும், சமூகத்திற்காக ஆற்றிய பணிகளையும் இந்நாளில் மட்டுமின்றி எந்நாளும் அனைவரும் போற்ற வேண்டும்.
 
இந்த வாழ்த்து செய்தி திமுக கூட்டணிக்கு அச்சாரமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சிபிஎஸ்இ 10,12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. இதுதான் வரலாற்றில் முதல்முறை..!

அமெரிக்க விமானங்கள் பஞ்சாப் வருவது ஏன்? முதல்வர் பகவந்த் சிங் மான் கேள்வி..!

தூண்டிக் கொண்டிருக்கிறீர்களா முதல்வரே? சாராய வியாபாரியால் கல்லூரி மாணவர் கொலை.. அண்ணாமலை

பரிட்சைக்கு நேரமாச்சு.. பாராகிளைடில் பறந்து சென்ற கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments