ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு உள்ளாகி பலர் உயிரிழந்துள்ளதால் இன்று கருணாநிதி 100வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தேசத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது வரை வெளியாகியிருக்கும் தகவலின்படி 233 பயணிகள் பலியாகியுள்ளதாகவும், 900 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்து காரணமாக இன்று நடைபெற இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று மாலை நடைபெற இருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம், செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்ட மலர்க் கண்காட்சிக்கு முதல்வர் செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செய்யும் நிகழ்ச்சியும், ஓமந்தூரில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் மட்டும் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.