அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக? எத்தனை தொகுதிகள்?

Siva
திங்கள், 19 பிப்ரவரி 2024 (06:45 IST)
அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இந்த இரு கட்சிகளுக்கும் கொடுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் பாஜக என மூன்று அணிகள் தனித்தனியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பாமக, தேமுதிக உள்பட சில கட்சிகளை கூட்டணியில் இணைக்க அதிமுக மற்றும் பாஜக முயற்சித்து வருகிறது என்று செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் பாமகவுக்கு ஏழு தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி தர அதிமுக ஒப்பு கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த முறை தர்மபுரி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அன்புமணி தோல்வி அடைந்தாலும் அவருக்கு ஒப்புக்கொண்டபடி ராஜ்யசபா தொகுதி கொடுத்ததால் பாமக, அதிமுக கூட்டணியிலே தொடர விருப்பம் தெரிவித்துள்ளது.
 
அதேபோல் தேமுதிகவுக்கு மூன்று தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி என பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து பாஜக ஏமாற்றம் அடைந்து இருந்தாலும் மேலும் சில கட்சிகளை கூட்டணியில் இணைக்க தீவிர முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு.. அனைத்து ஆவணங்களும் திருச்சிக்கு மாற்றம்!

20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்.. இந்த முறையும் அப்படித்தான்..!

புலி இன்னமும் சக்தியோடு தான் உள்ளது: நிதிஷ் குமார் இல்ல வாசலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

பிகார் சட்டப்பேரவை தேர்தல்: மண்ணை கவ்விய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி..!

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments