Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி கிடைக்கும்..! ஓபிஎஸ்

Advertiesment
பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி கிடைக்கும்..! ஓபிஎஸ்

Senthil Velan

, ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (15:18 IST)
பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்துள்ளன. எடப்பாடி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் ஒரு அணியும் என அதிமுக சிதறி கிடக்கின்றன.
 
மக்களவை தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறி அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார்.
 
கூட்டணி தொடர்பாக  பாஜகவுடன் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ், பாரதிய ஜனதா கட்சியை முழுமையாக ஆதரிக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு தந்துள்ளது என புகழாரம் சூட்டியுள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி கிடைக்கும் எனவும் ஓ.பன்னீர்செல்வம்  கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டீ விற்றவரின் மகன் நாட்டின் பிரதமர்.! இனிமேல் வாரிசு அரசியலுக்கு இடமில்லை..! அமித்ஷா