தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒரு கட்சியில் இருக்கும் தலைவர்கள் இன்னொரு கட்சிக்கு மாறிவரும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
குறிப்பாக மத்திய பிரதேசம் மாநில முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி ஆகிய இருவரும் பாஜகவின் சேர இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் தனது மகனுடன் பாஜகவில் சேர போவதாகவும் காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய தலைவராக இருந்த கமல்நாத் கட்சி மாற இருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் தோல்விக்கு கமல் நாத் தான் காரணம் என்று விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் மேல் இடத்தின் டார்ச்சர் தாங்காமல் அவர் ராகுல் காந்தியுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாகவும் தற்போது மேல்சபை எம்பி கேட்டு அது கிடைக்காத அதிர்ச்சியில் பாஜகவில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் மணீஷ் திவாரியும் பாஜகவில் சேர இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த செய்தியை அவர் மறுத்துள்ளார்