மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், அதிமுக தொண்டர்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் எம்ஜிஆர் இன் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
திரு எம் ஜி ஆர் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கவும் சிறந்த சமுதாயத்தை கட்டமைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் உத்வேகம் அடைந்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
முன்னதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினார் என்பதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.