காஷ்மீரில் ரூ. 2700 கோடியில் 12 கிலோமீட்டர் நீளமுள்ள சோனாமார்க் என்ற சுரங்கப் பாதையை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகா்-கார்கில் தேசிய நெடுஞ்சாலையில்
அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை 12 கிலோ மீட்டர் நீளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடல் மட்டத்திலிருந்து 8650 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கப் பாதை, ஸ்ரீநகர் மற்றும் சோனாமார்க் இடையே லே என்ற பகுதியை இணைக்கிறது. மிகுந்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதை ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா வரும் பொதுமக்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சுரங்கப் பாதையில் அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு மணி நேரத்தில் ஆயிரம் வாகனங்கள் செல்லலாம். இமயமலைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டமான பாதை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்று பிரதமர் மோடி இந்த வரலாற்று சிறப்பு மிக்க சோனாமார்க் சுரங்கப்பாதையை தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.