பிரதமர் மோடி அடுத்த மாதம் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாகவும் அங்கு நடைபெறும் ஜி 7 மற்றும் குவாட் மாநாடுகளில் அவர் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மே 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா என்ற நகரில் ஜி7 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகின் பல பிரபலங்கள் வருகை தர இருக்கும் நிலையில் பிரதமர் மோடியும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வெளிநாட்டு பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வரும் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் ஜப்பான் பிரதமர் இந்தியாவுக்கு வருகை தந்த நிலையில் தற்போது பிரதமர் ஜப்பான் செல்லும்போது அவரை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்ட அவர்கள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் அவர்களுடனும் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குவாட் மாநாடு ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட இருப்பதை அடுத்து ஆஸ்திரேலியா பிரதமரையும் பிரதமர் மோடி சந்திப்பார் என்றும் புதிய தொழில்நுட்பங்கள் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பிரதமர் இதில் பேசுவார் என்று கூறப்படுகிறது.