Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மாணவியுடன் லைவில் பேசிய பிரதமர் மோடி! – மன் கீ பாத் உரை!

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (11:53 IST)
இன்று நாட்டு மக்களுடன் மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் பேசிய பிரதமர் மோடி தமிழக மாணவி ஒருவருடன் நேரலையில் பேசியுள்ளார்.

மாதம்தோறும் மக்களோடு தம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மனதின் குரல் (மன் கீ பாத்) என்னும் நிகழ்ச்சியை தொடங்கி பேசி வருகிறார் பிரதமர் மோடி. இந்நிலையில் இந்த மாதத்திற்கான மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கார்கில் போர் நினைவு தினம் குறித்து பேசியதுடன், போர் வீரர்களையும் நினைவு கூர்ந்தார்.

பிறகு கொரோனா பாதிப்புகள் குறித்து பேசிய அவர் கொரோனா போர் இன்னமும் முடியவில்லை என்றும், தொடர்ந்து மக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் கூறினார். மேலும் நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் சிலர் பெயரை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

பிறகு நேரலையில் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மாணவ, மாணவிகளிடம் பேசிய பிரதமர் தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளியில் படித்து வரும் கனிகா என்ற மாணவியிடம் பேசினார். வணக்கம் என தமிழில் பேசிய அவர் நாமக்கலில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை நினைவு கூர்ந்தார். பிரதமரிடம் பேசிய கனிகா தனது டிரைவர் என்றும், தனது சகோதரியை சிரம் மேற்கொண்டு மருத்தும் படிக்க வைத்து வருவதாகவும் கூறிய மாணவி, தானும் மருத்துவம் படிக்க விரும்புவதாக கூறினார். அவருக்கு பிரதமர் மோடி தன் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், மாணவியின் தந்தையையும் பாராட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments