பாரதிதாசன் பல்கலை.க்கு வரும் முதல் பிரதமர் என்பதில் பெருமை: பிரதமர் மோடி பேச்சு

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (12:21 IST)
இந்த ஆண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாகவும், தமிழகத்தில் முதல் அரசு நிகழ்ச்சியாகவும் தமிழகத்திற்கு வந்துள்ளேன் என்றும், பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பாரதிதாசன் பல்கலை.க்கு வரும் முதல் பிரதமர் என்பதில் பெருமை கொள்கிறேன் என்றும் கூறினார்,
 
பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது எனவும், பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின என்றும், 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலை.களை தொடங்கினர் என்றும் பிரதமர் மோடி பாரதிதாசன் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசினார்.
 
மேலும் பல்கலை கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ அப்போதெல்லாம் நாடு வளர்ச்சி பெறுகிறது என்றும், கல்வி என்பது அறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூப்பர் மார்க்கெட்டில் மாத சம்பளம் வாங்கிய நபர்.. திடீரென ரூ.10 கோடிக்குக் சொந்தக்காரரான அதிசயம்..!

போரை முடிக்க டிரம்ப் விருப்பம்.. ஆட்சி மாற்றம் வரை போர் தொடரும் என நெதன்யாகு அறிவிப்பு.. பெரும் சிக்கல்..!

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம்: வரி செலுத்துவோர் கவனத்திற்கு முக்கிய மாற்றங்கள்!

7 கார், ஒரு மினிடிரக் வைத்துள்ள தவெக வேட்பாளர்.. எதிர்த்து போட்டியிடும் கல்லூரி மாணவி.. வங்கிக்கணக்கில் வெறும் ரூ.1500..

பெண்களுக்கு மாதம் ரூ.3000.. 40 லட்சம் பெண்களுக்கு ரூ.25,000.. 2 லட்சம் வேலைவாய்ப்புகள்.. பாஜக தேர்தல் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments