Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.. டிரெண்டில் இரண்டு வகை ஹேஷ்டேக்குகள்..!

MK Stalin PM Modi
, செவ்வாய், 2 ஜனவரி 2024 (07:26 IST)
பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வர இருப்பதை அடுத்து அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுநர் ரவி மற்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகை தருகிறார் என்பதும் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைக்கிறார் என்பதும் தெரிந்ததே. திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறந்து வைப்பு விழாவில் பிரதமர் மோடியுடன் ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் 
 
இந்த நிகழ்ச்சியை முடித்த பின்னராக பிரதமர் மோடி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் பிரதமர் என்று வருகை தருவதை அடுத்து பாஜகவினர் #VanakkamModi என்ற ஹேஷ்டேக்கையும்  பாஜகவுக்கு எதிரானவர் #GoBack_Modi என்ற ஹேஷ்டேக்கையும்   சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: இன்று முதல் விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்