Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

70% மதிப்பெண் எடுத்த மாணவி, தோல்வி பயம் காரணமாக தற்கொலை!

Advertiesment
suicide
, திங்கள், 20 ஜூன் 2022 (17:47 IST)
இன்று வெளியான பிளஸ் 2 பொது தேர்வு ரிசல்ட்டில் 70 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவி ஒருவர் தோல்வி பயம் காரணமாக நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரூபாஸ்ரீ என்ற 17 வயது மாணவி சமீபத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதினார். இவர் மதிப்பெண் குறைவாக எடுத்து விடுவோம் அல்லது தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்தார்.
 
இந்த நிலையில் நேற்று அவர் திடீரென கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று பிளஸ் டூ ரிசல்ட் வந்த நிலையில் அவர் 344 மதிப்பெண் எடுத்து 70 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர் 
குறைவான மதிப்பெண் எடுத்துக்கொண்டு விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்த மாணவி 70 சதவீத மதிப்பெண் எடுத்திருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் கடன் செயலி: மேலும் ஒரு இளைஞர் தற்கொலை