முதல் நாள் பள்ளிக்கு சென்று வந்தவுடன் பிளஸ் 2 மாணவி தற்கொலை.. காதல் விவகாரமா?

Mahendran
செவ்வாய், 3 ஜூன் 2025 (15:58 IST)
பொள்ளாச்சியில் முதல் நாள் பள்ளிக்கு சென்று வந்தவுடன், பிளஸ் 2 மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பொள்ளாச்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வரும் முருகானந்தன் மகள் சரிகா, நேற்று பள்ளி திறந்தவுடன் பள்ளிக்கு சென்று, மாலையில் வீடு திரும்பியுள்ளார்.
 
இந்த நிலையில், பெற்றோர்கள் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சரிகா தூக்கில் தொங்கியபடி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து, காவல்துறை சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
முதல் கட்ட விசாரணைகள், சரிகாவும் அவரது ஆண் நண்பரும் சண்டை போட்டுக் கொண்டதாகவும், அதனால் மனமுடைந்த சரிகா தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து, சரிகாவுடன் பேசிய ஆண் நண்பர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
பள்ளி திறந்த முதல் நாளே பிளஸ் டூ மாணவி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments