Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று 11:30 மணிக்கு பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்!

Advertiesment
இன்று 11:30 மணிக்கு பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்!
, திங்கள், 13 செப்டம்பர் 2021 (07:44 IST)
தமிழகத்தில் ஏற்கனவே பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவ-மாணவிகள் மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து விட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவு இன்று வெளியாக உள்ளது 
 
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிளஸ்-2 துணை தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
மேலும் இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் செப்டம்பர் 15, 16 தேதிகளில் முதல் முதன்மை கல்வி அலுவலகத்தில் மறுகூட்டலுக்கு பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மதிப்பெண் நகல் பெற ஒரு பாடத்திற்கு ரூபாய் 275 கட்டணம் என்றும் மறு கூட்டலுக்கு உயிரில் பாடத்திற்கு மட்டும் ரூபாய் 305 என்றும் மற்ற பாடங்களுக்கு தலா 205 என்று கட்டணம் செய்யப்பட்டது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயற்பியல், வேதியியல் கடினமாக இருந்தது: நீட் தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து!