Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே 3 ஆம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வு......தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு

Advertiesment
மே 3 ஆம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வு......தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு
, சனி, 10 ஏப்ரல் 2021 (16:33 IST)
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  கட்டாயம் மே 3 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவிவருகிறது. இதைத்தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவிலும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. அதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பள்ளி ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர்.

எனவே வரும் மே 3 ஆம் தேதி முதல் பிளஸ் 2மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அதேபோல் 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  திறனறி  தேர்வு நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு... தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு