Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

நூக்கல் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் பலன்கள்

Advertiesment
Benefits of eating Nooka
, வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (23:50 IST)
நூக்கலானது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்யும். நூக்கலின் கீரையில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப்  பெரிதும் உதவுகிறது.
 
நூக்கல் ஜீரண சக்தியை அதிகரிக்கும். நூக்கலானது நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. நூக்கல் வயிற்று பிரச்சனைகளுக்கும், வயிற்றுப்புண்களுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்த்து போராட கூடியது.
 
நூக்கலானது மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நூக்கலை மூன்று  நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
 
நூக்கலானது வயிற்று பிரச்சனைகளை நீக்கும் தன்மைக் கொண்டது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். நூக்கல் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் குடல் நாளங்கள் உறுதிப்படும், மேலும் எலும்புகளும் உறுதியாகும்.
 
நூக்கலை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது. நூக்கலானது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
 
நூக்கலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் சக்தியையும் அதிகரிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்க்கரைக்கு பதில் கருப்பட்டியை சேர்ப்பதால் என்ன நன்மை?