Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோழிக்காக தனது உயிரை விட்ட பிளஸ்-1 மாணவி

Advertiesment
தோழிக்காக தனது உயிரை விட்ட பிளஸ்-1 மாணவி
, வெள்ளி, 22 டிசம்பர் 2017 (07:28 IST)
விழுப்புரம் அருகே  உடன் படித்த தோழி இறந்ததால் கவலையில்  மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் பிரசாந்தி(16). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். திருநாவலூரை அடுத்த ஆவலம் கிராமத்தை சேந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் ரசிகா(16). இவரும் பிரசாந்தி படிக்கும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இருவரும் இணைபிரியாத தோழிகள்.
 
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகாவிற்கு மர்மகாய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயத்தை அறிந்த பிரசாந்தி மனவேதனை அடைந்தார். இதனால் பள்ளிக்கு கூட செல்லாமல், மிகவும் சோகமாக காணப்பட்டார். 
 
இதனையடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த பிரசாந்தியின் தந்தை, மகள் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தோழி இறந்த கவலையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

50 பெண்களை பாலியல் பலாத்காரன் செய்தவனுக்கு 3 வருடம் மட்டுமே தண்டனையா?