Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில் நிலையங்களில் ப்ளாட்பார்ம் டிக்கெட் உயர்வு!? – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Advertiesment
Train
, வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (09:22 IST)
பண்டிகை காலங்கள் நெருங்கியுள்ள நிலையில் சென்னையில் சில ரயில் நிலையங்களில் ப்ளாட்பார்ம் டிக்கெட்டுகள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் உள் மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் பயணிக்க பெரும்பாலும் ரயிலையே தேர்வு செய்கின்றனர்.
இந்நிலையில் பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் ரயில் நிலையங்களில் அதிகரிக்கிறது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ரயில் நிலையங்களின் ப்ளாட்பார்ம் டிக்கெட் விலையை அதிகரிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், ஆவடி, திருவள்ளூர் ஆகிய 8 ரயில் நிலையங்களிலும் நாளை அக்டோபர் 1ம் தேதி முதல் 2023ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை ஒரு நபருக்கான ப்ளார்பார்ம் அனுமதி டிக்கெட்டின் விலை ரூ.10லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் ரத்தாகிறதா? சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு