இன்னும் சில மணி நேரங்களில் வலுவடையும் புரெவி! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (09:13 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் தென் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் மேலும் வலுவடைவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் தீவிரமடைந்த நிலையில் புயலாக மாறியுள்ளது. புரெவி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் தென் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தற்போது பாம்பனிலிருந்து 530 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் 5 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், கேரள பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக, திமுக, தவெக.. மூனு பக்கமும் காய் நகர்த்தும் ஓபிஎஸ்.. நடப்பது என்ன?...

விமான விபத்தில் சிக்கிய அஜித் பவார் மரணம்!.. பாஜகவினர் அதிர்ச்சி

அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது!.. அதிர்ச்சி செய்தி..

எதிர்க்கும் திருமா!.. ஸ்டாலின் சொல்வதை கேட்பாரா ராமதாஸ்?!.. கூட்டணியில் குழப்பம்!...

அதிமுக கூட்டணியா? இல்லை தேசிய ஜனநாயக கூட்டணியா?!.. முகத்தை இழக்கிறதா அதிமுக?!..

அடுத்த கட்டுரையில்
Show comments