ரஜினி அரசியலுக்கு வரலைன்னா செத்துடுவேன்! – ரசிகரின் ட்வீட்டால் பீதியடைந்த நிர்வாகிகள்!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (08:41 IST)
நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நிர்வாகிகளுடன் அலோசித்த நிலையில் அரசியலுக்கு வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக ரசிகர் ஒருவர் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்ட அவர் கட்சி தொடங்குவது குறித்த தனது முடிவை விரைவில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் தஞ்சாவூரை சேர்ந்த சத்யமூர்த்தி என்ற நபர் ட்விட்டரில் “ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன்” என பதிவிட்டுள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பட்டுக்கோட்டை ரஜினி மக்கள் மன்றத்தின் ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இவரது பதிவை கண்டு அதிர்ந்த மக்கள் மன்ற நிர்வாகிகளை அவரை தொடர்புகொண்டு ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து நல்ல முடிவை விரைவில் அறிவிப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்ததுடன், பதிவையும் நீக்குமாறு கேட்ட்க்கொண்டதன் அடிப்படையில் அவர் பதிவை நீக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments