Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊழியர்களின் பி எஃப் செலுத்தாமல் இழுத்தடிப்பு – சரவணபவன் நிர்வாகத்திடம் விசாரணை !

ஊழியர்களின் பி எஃப் செலுத்தாமல் இழுத்தடிப்பு – சரவணபவன் நிர்வாகத்திடம் விசாரணை !
, வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (13:45 IST)
ஊழியர்களின் பி எஃப் பணத்தை முறையாக செலுத்தாமல் 20 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக சரவணபவன் நிறுவனத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

உலகளவில் பல்வேறு நாடுகளில் கிளைகள் பரப்பி ஹோட்டல் தொழிலில் வெற்றிக்கொடி நாட்டிய சரவணபவன் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறது. அந்நிறுவனத்தின் நிறுவனரான ராஜகோபால் மீது பல வருடங்களாக நடந்து வந்த சாந்தகுமார் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு உடல்நலமில்லாமல் ஜூலை 18 ஆம் தேதி அவர் ஸ்டான்லி மருத்துவமனையிலேயே மரணம் அடைந்தார்.

அவர் உயிருடன் இருக்கும்போதே சரிவுகளை சந்தித்த நிறுவனம் இப்போது மோசமான நிலையில் உள்ளது. ஊழியர்களின் வைப்பு நிதியான பி எஃப் பணத்தை நீண்டகாலமாக கட்டாமல் இருந்து வந்துள்ளது. அந்த வகையில் சுமார் 20 கோடி ரூபாய் பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனையொட்டி சென்னை பிஎஃப் ஆணைய அதிகாரிகள் சரவண பவன் அதிகாரிகளிடம் விசாரணை  நடத்தி வருகின்றனர். ஹோட்டலின் வருவாய் வீழ்ச்சியே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 5 ரூபாய் கேஷ்பேக் – நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு !