Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் பங்க், காய்கறி கடைகள் திறக்க கட்டுப்பாடு !

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (20:46 IST)
பெட்ரோல் பங்க், காய்கறி கடைகள் திறக்க கட்டுப்பாடு !

தமிழகத்தில் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில்தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  வரும் ஞாயிற்றுகிழமை முதல் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2. 30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் - முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், காய்கறி உள்ளிட்ட சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள்  மாலை ஆறு மணி முதல் காலை 6 மண்இ வரை மட்டுமே  இயங்கும்.

மருந்தகங்கள்,  உணவகங்கள் நாள் முழுவதும் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விக்கி, ஜோமோட்டோ , உபேர் நிறுவனங்கள் உணவு விநியோகிக்க நேர கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது.அதில் காலை 7 முதல் 9: 30 மணி வரை; மதியம் 12 முதல் 2: 30 மணி வரை: மாலை 6 முதல் 9 மணி வரை ஆகும்.

விளைபொருட்களை  180 நாட்கள் சேமிப்புக் கிடங்குகளில் வைத்து பாதுகாக்கலாம், சேமிப்புக் கிடங்கிற்கான வாடகைக் கட்டணத்தை  30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பெட்ரொல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2: 30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments