Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொடைக்கானல் பெட்ரோல் & டீசல் தட்டுபாடு?

கொடைக்கானல் பெட்ரோல் & டீசல் தட்டுபாடு?
, புதன், 17 ஆகஸ்ட் 2022 (11:11 IST)
அதிக மக்கள் கூட்டத்தால் பெட்ரோல், டீசல் இல்லாததால் சுற்றுலா பயணிகள் நாள் முழுவதும் திண்டாடினர்.


நாடு முழுவதும் ஆகஸ்டு 15 திங்கட்கிழமை அன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் விடுமுறை விடப்பட்டன. ஏற்கனவே சனி, ஞாயிறு விடுமுறை உள்ள நிலையில் திங்கட்கிழமையும் சேர்த்து மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் மக்கள் பலரும் கொடைக்கானலுக்கு சென்றனர்.

கொடைக்கானலில் 3 பெட்ரோல் பங்குகள் மட்டுமே உள்ள நிலையில் அதிக மக்கள் கூட்டத்தால் 3 பங்குகளிலும் பெட்ரோல், டீசல் இல்லாததால் சுற்றுலா பயணிகள் நாள் முழுவதும் திண்டாடினர்.

ஆம், கொடைக்கானலுக்கு பெட்ரோல், டீசலுடன் வந்த லாரிகள் நெரிசலால் மலைச்சாலையை கடக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டன. காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை இதே நிலை நீடித்து பின்னர் சரியானது. இந்த சம்பவத்தால் கொடைக்கானலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 102.63 என்றும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 94.24  ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் திடீரென சீல் வைக்கப்பட்ட 130 கடைகள்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி!