Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உயர்ந்தது டீசல் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (07:09 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் சமீபத்தில் டீசல் விலை மட்டும் உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஏற்கனவே நேற்று டீசல் விலை உயர்ந்த நிலையில் இன்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று டீசல் விலை 24 காசுகள் உயர்ந்து உள்ளட்ஜா; டீசல் விலை 94 ரூபாயை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பெரிய அளவில் உயரவில்லை என்றாலும் இந்தியாவில் நேற்று டீசல் விலை உயர்த்தப்பட்டது. இன்றும் டீசல் விலை 24 காசுகள் உயர்ந்ததால் சென்னையில் இன்று டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 93.93 என்ற விலைக்கு விற்கப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் விலை உயரவில்லை என்பதால் ரூபாய் 98.96 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் டீசல் விலை உயர்ந்து வருவதை அடுத்து பெட்ரோல் விலையையும் தாண்டிவிடும் டீசல் விலை என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments