Publish Date: Thu, 12 Jan 2023 (07:52 IST)
Updated Date: Thu, 12 Jan 2023 (07:54 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த எட்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 236-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறினாலும் இறங்கினாலும் இந்த எட்டு மாதங்களில் இந்தியாவில் பெட்ரோல் விலை ஏறவும் நிலை இறங்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.3 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ₹94.24 எனவும் விற்பனை ஆக்கி வருகிறது.