Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலை வைத்து வழிபாடு நடத்தி கொண்டாட மலைவாழ் பழங்குடி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு......

J.Durai
சனி, 24 ஆகஸ்ட் 2024 (09:21 IST)
கோவை மாவட்டம் ஆனைகட்டி சுற்று வட்டார பகுதிகளான தும்மனூர், செம்புகண்டி, ஜம்புகண்டி போன்ற 5  மலை கிராமங்களில் உள்ள நூற்றுக் கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
 
நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் வைத்து வழிபாடு நடத்தி கொண்டாடுவதை போன்று  மலை கிராமங்களில் நாங்களும் விநாயகரை வைத்து வழிபாடு நடத்தி கொண்டாட முடிவு செய்து உள்ளனர்.இது குறித்து தடாகம் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தனர். இந்நிலையில் காவல் துறையினர் புதிதாக விநாயகர் வைத்து வழிபட உரிய அனுமதி பெற்ற பின்பு நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
 
இதை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மலைவாழ் கிராமம் மக்கள் தாங்களும் விநாயகர் வைத்து வழிபாடு நடத்தி கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
 
மாநகரங்களில் வாழும் மக்கள் கொண்டாடுவது போன்று தாங்களும் தாங்கள் குழந்தைகளும் வழிபாடு நடத்தி கொண்டாடி மகிழ அனுமதி அளிக்கப்படுமா..? என எதிர்பார்ப்புடன் காத்து இருக்கும் மலை கிராமத்து பழங்குடியின மக்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார்.! கைது செய்ய காவல்துறை முனைப்பு.!!

ஆன்மிக சொற்பொழிவு கல்வித் துறைக்கு தெரியாமல் நடந்ததா? தலைமை ஆசிரியர் இடமாற்றம் - சீமான் கண்டனம்..!

புத்தக கண்காட்சியில் சாமியாடிய மாணவிகள்.! மாவட்ட நிர்வாகம் விளக்கம்.!!

ஆன்லைன் செயலி மூலம் விற்பனை செய்யப்பட்ட 60 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள்: காவல் துறை பறிமுதல்!

அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் தொடரும் பணி.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments