Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் தம்பிக்கு கொடியில் யானை படம் வைக்க உரிமை இல்லையா.? விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்.!!

Seeman Vijay

Senthil Velan

, வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (20:27 IST)
என் தம்பிக்கு கொடியில் யானை படம் வைக்க உரிமை இல்லையா?  என விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசி உள்ளார்.
 
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் நேற்று தனது கட்சிக் கொடி, கட்சிப் பாடல், உறுதிமொழி ஆகியவற்றை வெளியிட்டார். த.வெ.க கட்சிக்கொடியில் இடம்பெற்றுள்ள யானைகள், வாகை மலர், கொடியின் நிறம் பற்றிய விளக்கங்களை மாநாட்டில் அறிவிப்பதாக அவர் கூறினார்.
 
தவெக கட்சிக்கொடியில் இடம்பெற்றுள்ள யானை  எங்கள் தேர்தல் சின்னம் என்றும், அதனை விஜய் பயன்படுத்த கூடாது என்றும் பகுஜன் சமாஜ்வாடி கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.  கேரள போக்குவரத்துத் துறை சின்னத்தை, விஜய் பயன்படுத்தியுள்ளார் என சென்னை காவல்துறை ஆணையகரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் கொடி அறிமுகப்படுத்தியதில் என்ன சர்ச்சை? யானை ஆப்பிரிக்காவில் மட்டும் தான் இருக்கிறதா? இங்கு இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். மேலும்  யானையை எந்த ஒரு தனி மனிதனும், கட்சியும், மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்று சீமான் தெரிவித்தார்
 
தேர்தல் ஆணையத்திடம் நான் புலி சின்னம் கேட்டேன். அது தேசிய விலங்கு என்றார்கள். மயில் கேட்டேன் தேசிய பறவை என்றார்கள். அப்படியென்றால் தேசிய மலர் தாமரையை மட்டும் ஏன் பாஜகவுக்கு கொடுத்தீர்கள் என்று கேட்டதாக அவர் கூறினார்.
 
சங்ககாலத்தில் நாம் யானைப் படை தான் வைத்திருந்தோம். நம் மன்னன் அருள்மொழி சோழன்  60 ஆயிரம் யானைகளைக் கொண்டு போர் புரிந்தான். நாம் யானைப்படை பார்த்து எதிரிகள் ஓடினர். அப்படிப்பட்ட நாம் யானை படத்தை வைத்திருக்க முடியாதா? அந்த உரிமை என் தமிபிக்கு இல்லையா? என்று சீமான் கேள்வி எழுப்பினார்.   


கொடியில் இடம்பெற்றுள்ள மலர் வாகை மலராக இருந்தால் என்ன? தூங்கு மூஞ்சி மலராக தெரிந்தால் என்ன? என்று ஆவேசம் தெரிவித்தார் யானைப்படை கொண்டு போர் புரிந்து வெற்றி வாகை சூடினோம் என புறநானூற்றில் இருக்கிறது  என  சீமான் குறிப்பிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கிய முதல்வர்.! பெண் காவலர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு.!!