Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளிகள், அனைத்து திரையரங்குகள் திறக்க அனுமதி – முதல்வர் அறிவிப்பு..

Advertiesment
பள்ளிகள், அனைத்து திரையரங்குகள் திறக்க அனுமதி – முதல்வர் அறிவிப்பு..
, சனி, 31 அக்டோபர் 2020 (18:26 IST)
கொரோனா கால பொதுமுடக்கம்  சில தளர்வுகளுடன் வரும் நவம்பர் 30 வரை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று இன்னும்  பரவலாகிக் கொண்டிருப்பதால் இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து மக்களைப் பாதுக்காக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள நிலையில் பரவல் தொடர்வதால் இன்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் வரும் நவம்பர் 10 முதல் அனைத்து திரையரங்குகள்,  அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி (வணிக வளாக தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் ) 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளித்துள்ளார். சின்னத்திரை மற்றும் திரைப்படப் படப்பிடியில் 150 பேர் கலந்துகொள்ளலாம் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

அதேபோல்  பொழுதுபோக்கு பூங்காக்கள், அரசு வழிகாட்டுதல் நெறிப்படி… திறக்கவும் அனுமதி அளித்துள்ளார்.

திருமண விழாக்கள் ஊர்வலங்களில் 100 நபர்களுக்கு மிகாமல் நிகழ்ச்சிகளை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

 
நவம்பர் 16 முதல்  9 ,10,11,12, ஆகிய  வகுப்புகளுக்கான வகுப்புகள்  தொடக்கப்படும் எனவும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தவிற்பனை வரும் 2 ஆம் தேதிமுதல், தொடங்கும் எனவும், சில்லரை விற்பனை  வரும் 16 ஆம் முதல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி கடைகளை 3 கட்டங்களாகத் திறக்கவும் அனுமதியளித்துள்ளார். 

சுற்றுலாத் தளங்களில் புதுச்சேரியைத் தவிர ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு அனுமதியில்லை எனவும் இ-ரிரெஜிஸ்ரேஷன் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் வேண்டுகோளுக்கிணங்க புறநகர் ரயில்களை இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலைக் கவலைக்கிடம் – மருத்துவமனை அறிக்கை!