Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரியார் மண்ணில் பெரியார் சிலைக்கு அவமரியாதையா ? செந்தில் பாலாஜி ஊருக்கு அருகேயே பரபரப்பு

பெரியார் மண்ணில் பெரியார் சிலைக்கு அவமரியாதையா ? செந்தில் பாலாஜி ஊருக்கு அருகேயே பரபரப்பு
, செவ்வாய், 18 ஜூன் 2019 (20:22 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் தமிழகத்தின் சட்டசபை இடைத்தேர்தல்களிலும் இடைத்தேர்தல் நடைபெற்றதையடுத்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனைத்து கட்சி தலைவர்களின் சிலைகளை மூட உத்திரவிட்டதையடுத்து, ஆங்காங்கே அனைத்து கட்சித்தலைவர்களின் சிலை மூடப்பட்டிருந்தன. 

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரேயே, அதுவும் காஷ்மீர் டூ கன்னியாகுமாரி தேசிய நெடுஞ்சாலையின் அருகே மண்மங்கலம் சமத்துவபுரத்தில் அரசின் சார்பில், தந்தை பெரியார் சிலை தி.மு.க ஆட்சியின் போது நிறுவப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையிலும் சுமார் 20 நாட்களுக்கும் மேலாக சாக்குப்பைகளினால் மூடப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாமல் தமிழக அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஊருக்கு அருகே, தான் இந்த அவலநிலை என்பதும், தற்போது அவர் தான் கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ வும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
திராவிட கட்சிகள், ஆங்காங்கே பெரியார் மண், பெரியார் மண் என்று கூறி வரும் நிலையில், தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியின் ஊருக்கே அருகேயே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சிலை மூடப்பட்டிருப்பது தான் இந்த மாவட்டத்தில் கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி