Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடியின் வெற்றிப் பயணம் ஒரு பார்வை !

பிரதமர் மோடியின் வெற்றிப் பயணம் ஒரு பார்வை !
, வியாழன், 23 மே 2019 (19:08 IST)
இன்று உலக தலைவர்கள் அனைவரும் பலத்த உற்றுநோக்கலுடன் இந்தியாவின் அடுத்த பிரதமரான மோடிக்கு தங்கள் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டுள்ளனர்.  கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய மக்கள்வைத் தேர்தல் இம்மாதம் 19 ஆம் தேதி முடிவடைந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல்  திருவிழாவின்  வாக்கு எண்ணிக்கை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
காலை 8 மணிக்குத்தான் வாக்கு எண்ணிக்கை என்றாலும் அனைத்து இந்தியர்களும் தமது ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ததை தேர்தல் அதிகாரிகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவே ஆவலுடன் தொலைக்காட்சி முன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.
 
ஏறக்குறைய நண்பகல் வேலையிலேயே பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.பாஜக  345 மக்களவைத் தொகுதிகளில், வெற்றிபெற்று உள்ளது. அதனால தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சிஅமைக்க வரும் 26 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் உரிமை கோர உள்ளது.
 
இதுமுக்கியமான செய்தி என்றாலும் இந்த வெற்றிக்குக் காரணம் பாஜகவின் முதுகெலும்பாகத் திகழும் பிரதமர் மோடியின் இமேஜ் என்றால் அது மிகையல்ல.
 
அதுகுறித்து பார்ப்போம் :
 
கடந்த 1950 - செப்டம்பர் 17 ஆம்நாளில் ஒரு நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தவர் நரேந்திர தாமோதர்தாசு மோதி. இவர் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலில்  தனது மனைவி ஜசோதாபென் என்று தெரிவித்துள்ளார் மோடி.
 
இவர் சிறு வயதில் இருந்து  ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். அப்போது வறுமையின் பொருட்டு கடையில் டீ போடுபவராக வேலை செய்ததாகவும் பலமுறை கூறியுள்ளார்.
 
பின்னர் பாஜக அரசியலில் சேர்ந்து தன்னை திறமையானவராக உருவாக்கிக்கொண்டார்.  கடுமையாக உழைத்து நேர்மையாக அரசியலில் செயல்பட்டதால் குஜராத் மாநில முதல்வரானார். தனது ஆற்றல்மிக்க நிர்வாகத்திறனால் அம்மாநிலத்தை முதல்தரமான மாநிலமாக மாற்றி சாதனைபடைத்தார்.
 
சிலகாரணங்களால் அமெரிக்காவுக்கு வர மோடிக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் மோடி அலை வீசி கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் பிரதமராக ஆனபின்னர் தான் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவே மோடியை சந்திக்க வந்தது சரித்திரம்.
webdunia
அதன்பின்னர் இந்தியாவில் கடுமையாக கள்ளச்சந்தை, கறுப்பு பண விவகாரத்தை முடிவுக்குக்கொண்டுவர..2016 ஆம் ஆண்டு ஒரு இரவில் திடீரென்று 1000, 500, ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். 
 
இதற்கு முக்கியமான ஒரு காரணமாக மோடி கூறியது , டிஜிட்டல் பண வர்த்தகத்திற்கு அனைவரும் மாறவேண்டும் என்று.ஆனால் அப்போதைய மக்கள் ஏ.டி.எம் மையங்களுக்கு அலைந்ததை மறுக்கமுடியாது என்றாலும்கூட லஞ்சம் கொடுக்கும் வழக்கமும், பணத்தைக்கொண்டு பொருள் வாங்கும் பழக்கம் பெருமளவு குறைந்து, சிலர் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய ஏதுவாக அமைந்தது.
webdunia
இதனையடுத்து ஜி .எஸ். டி முறை ஒட்டுமொத்த வணிகர்களிடம் குவிந்த பணத்தைத் தடுத்தது. முக்கியமாக ஒவ்வொரு மாநிலத்திற்கு மாநிலம் தனித்தனியே இருந்த வரியை மாற்றி ஒவ்வொரு பொருளுக்கும் குறிப்பிட்ட வரியை நிர்ணயித்து அதில் மத்திய அரசுக்கான வரி : மாநில அரசுக்கான வரியை நிர்ணயித்தார். அது வணிகர்களால் பெரிதும் சபிக்கப்பட்டாலும் இந்தியாவின் பணவீக்கம் குறையவும் , நாட்டின் வருமானமும், வரிகள் அதிகரிக்கவும், போலியான கணக்கு காட்டி வணிகர்களிடம் முறைகேடாக சேரும் கறுப்புபணத்தை தடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் அதைச் சாதுர்யமாக மாற்றி வரியாக விதித்திட்ட மோடியின் திட்பம் இன்றியமையாதது. ஆனால் இவ்வரி சாமானியனின் தலையில் விழுவதுதான் மக்களை எரிச்சல் அடையச்செய்தது.
 
மோடியின் ஆட்சியில் அனைத்து மக்களுக்கு தனி அடையாள அட்டை( ஆதார் அடையாள அட்டை ) கொண்டு வரப்பட்டு நாடு மிகப்பாதுகாப்புக்கு உள்ளாக்கப்பட்டது ஒரு முக்கிய செயலாகும். செல்போன், போன்,நகை, பணப்பரிமாற்றம், வங்கிக்கணக்கு, சிம்கார்டு போன்ற அனைத்திலும் ஆதார் அட்டையைப் புகுத்தி ஒரு பாதுகாப்பு புரட்சியை ஏற்படுத்தினார்.
 
பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி புல்வாமாவில் நமது ராணூவத்தினர் மீது தீவிரவாதிகல் தாக்குதல் நடத்தினர். அதில் 40 பேர் பலியாகினர், இதற்குப்பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற நம் விமானப்படையினர் குண்டு வீசி தீவிரவாதிகளை அழித்தனர். ஆனால் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கினார். 
 
அப்போது தான் பலவெளிநாடுகளுக்குச் சென்று பல உலகத் தலைவர்களுடன் நட்பு பாராட்டியதால் கிடைத்த நெருக்கத்தை பாகிஸ்தானிடம் சிக்கிய விமானி அபிநந்தனின் விடுதலைக்காக மேற்கொண்டார்.இதில்  அமெரிக்க உள்பட பல உலக நாடுகளின் அழுத்தத்தால் அவரை அடுத்த நாளே விடுதலை செய்தது. இது மோடியின் பெருமையைப் பெருமையை பறைசாற்றியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவின் அசாத்திய வெற்றி எப்படி சாத்தியமானது?