பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோலை நீட்டிப்பு

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (10:21 IST)
உடல்நலக்குறைவால் பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோலை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைதண்டனை வசித்து வரும் 7 தமிழர்களில் ஒருவர் பேரறிவாளன் என்பது தெரிந்தது. அவரை விடுதலை செய்ய அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த 25 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பேரறிவாளனுக்கு பலமுறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பரோலில் இருக்கும் பேரறிவாளன் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால் பரோலை நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதை ஏற்று பேரறிவாளன் பரோலை மேலும் ஒருமாதம் நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments