Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பேரறிவாளன் !

மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பேரறிவாளன் !
, வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (16:24 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் இவர்களை விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன் காரணமாக தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பியது ஆனால் கவர்னர் அந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்ட காரணத்தினால் இன்னும் அதற்கான முடிவு தெரியாமல் உள்ளது.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளனுக்கு சமீபத்தில் ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்டது அந்த. பரோல் காலம் தற்போது முடிவடைந்த நிலையில் மேலும் ஒரு மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவரின் பரோல் இம்மாதம் 28 ஆம் தேதி வரை உள்ள நிலையில் அவருக்கு சிறுநீரகத் தொற்று, ரத்த அழுத்தம் மற்றும் மூட்டு வலி பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாலும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதாலும் விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்துள்ளார்.
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரை ஆதீனம் மருத்துவமனையில் அனுமதி