Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

Advertiesment
மு.க. ஸ்டாலின்

Mahendran

, புதன், 16 ஜூலை 2025 (13:40 IST)
தொடர்ச்சியாக பத்து தேர்தல்களில் தோல்வியடைந்த பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்" என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறையில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
"மயிலாடுதுறை மாவட்டத்தின் மருமகன் என்ற முறையில் உங்களுக்காக புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட வந்துள்ளேன். மழையையும் பொருட்படுத்தாமல் என் மீது அன்பு மழை பொழியும் மக்களுக்கு எனது நன்றி" என்று ஸ்டாலின் தனது உரையை தொடங்கினார்.
 
மேலும், "எடப்பாடி பழனிசாமி தனது நான்காண்டு ஆட்சியில் என்ன செய்தார்? பெண்கள் திருமணத் திட்டத்தை நிறுத்தியவர் அவர்தான். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தையும் அவர்தான் நிறுத்தினார். அவர் எனக்கு டாட்டா சொல்கிறாராம். பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019 ஆம் ஆண்டில் இருந்து தமிழக மக்கள் உங்களுக்கு தொடர்ச்சியாக 'டாட்டா, பை பை'தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக 'குட்பை' சொல்லப் போகிறார்கள் மக்கள். இனியும் உங்களை ஒருபோதும் நம்ப போவதில்லை. உங்கள் கட்சிக்காரர்களே உங்களை நம்ப தயாராக இல்லை" என்று பேசினார்.
 
"பா.ஜ.க.வை நம்பி நீங்கள் ஏமாந்து போயிருக்கிறீர்கள். உங்கள் சுயநலத்திற்காக, உங்கள் குடும்பத்தினரை ரெய்டில் இருந்து காப்பாற்றுவதற்காக, டெல்லியில் போய் அ.தி.மு.க.வை அடமானம் வைத்துவிட்டு வந்திருக்கிறீர்கள்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!