திருவள்ளூர் மாவட்டம் அருகே உள்ள வேப்பம்பட்டில் ஹார்வேர்டு வேர்ஸ் கடை நடத்திவருபவர் நந்தகுமார். இந்நிலையில் இவர் தன் கடையை பூட்டிவிட்டு தன் அம்மா லோகம்பாளுடன் கடையை சுத்தம் செய்வதற்காகச் சென்றுவிட்டார்.
பின்னர் லோகம்பாளுடன் வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அப்போது வீட்டுக்குள் பிரோவை உடைத்து நகைகளையும், பணத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு இளைஞர் தப்பித்துச் செல்ல முயன்றார்.
அந்த திருடனை லோகாம்பாள் பிடிக்க முயன்றார். ஆனால் அவரை தள்ளிவிட்டு திருடன் ஓடத்தொடங்கினார். லோகாம்பாள் சத்தமிட வீட்டில் அருகே உள்ள ஹார்ட்வேர்டு கடையில் இருந்து வெளியே வந்த நந்தகுமார் அந்த திருடனை ஓடிச்சென்று பிடித்தார்.
இதையடுத்து அங்கிருந்த மக்கள் அந்த திருட்டு இளைஞரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். கம்பத்தில் கட்டி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு இளைஞரை மீட்டு அவரிடம் விசாரித்தனர்.அதில் திருநின்றவூரைச் சேர்ந்த வெங்கையன் என்பதும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்குள் திருட வந்ததாகக்கூறியுள்ளார். பின்னர் அவரை போலீஸார் கைதுசெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.