Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும்- முதல்வர்

Sinoj
திங்கள், 25 மார்ச் 2024 (20:35 IST)
பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால், மணிப்பூர் போல இந்தியா மாறிவிடும்  நெல்லையில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்,   சமீபத்தில் திருச்சியில் இருந்து   முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களவை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
 
இன்று திருநெல்வேலியில்  உள்ள நாங்குநேரியில் தேர்தல் பிரசாரத்தை தொடர்து வரும் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்,  '' தேர்தலையொட்டி தமிழ் நாட்டிற்கு வருகை தந்த மோடி, சமீபத்தில் திரு நெல்வேலிக்கு வருகை தந்தை மோடி, தமிழ் நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு காலங்களில் எங்கே போயிருந்தார்?  பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால், மணிப்பூர் போல இந்தியா மாறிவிடும். 

பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்பதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான  இந்தியாவாக மாறிவிடும்.  தமிழர்களை வெறுக்காத ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்றால் பிரதர் மோடியை தோற்கடிக்க வேண்டும். ஒரு ஒன்றிய அமைச்சர் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்றும்,  இன்னொரு அமைச்சர் தீவிரவாதிகள் என குற்றம்சாட்டியுள்ளார். ஆட்சி இருக்கு, பதவி இருக்குனு பாஜகவினர் என்ன வேணும்னாலும் ஆணவமாக பேசலாமா?'' என்று கூறினார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments