தமிழகத்தில் மொத்தமாக 2,363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம் கொரோனாவால் 94 பேர்களும் நேற்று 138 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் மட்டும் மொத்தம் 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 56 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளதாவது : ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் மக்கள் புதிய இயல்பு வாழ்க்கை வாழ தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா ஆபத்து நீங்கும் வரை மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் பொதுமுடக்கத்தை நீட்டித்தால் ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் உதவித்தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.