சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்த நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மே 3உடன் கொரோனா ஊரடங்கு முடிய இருக்கும் நிலையில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையாமலே இருந்து வருகிறது. முக்கியமாக தலைநகர் சென்னையில் நிலவரம் மிகவும் கட்டுக்கடங்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று ஒருநாளில் மட்டும் சென்னையில் நூற்றுக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சிறப்பு குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. அதன்படி சென்னை கொரோனா சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறப்பு அதிகாரிகளாக துணை டிஜிபிக்கள் மகேஷ்குமார், ஆபாஸ் குமார், அமரேஷ் புஜாரி உள்ளிட்ட அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு குழுக்களின் தீவிர செயல்பாடுகளின் மூலம் சென்னையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரலாம் என நம்பப்படுகிறது.