Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மணிக்கு மதுக்கடைகளை பூட்ட எதிர்ப்பு: கால்கடுக்க காத்திருந்து காலியாக செல்ல முடியாது!

Webdunia
வியாழன், 7 மே 2020 (17:10 IST)
5 மணிக்கு மதுக்கடைகளை பூட்ட எதிர்ப்பு
சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் முன் கூட்டம் குவிந்தது. நீண்ட வரிசையில் ஏராளமாக மதுப் பிரியர்கள் கால்கடுக்க காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்
 
மேலும் மதுக்களை வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் குறிப்பிடப்பட்டு இருந்தாலும் அதையெல்லாம் பின்பற்ற முடியாத முடியாமல் அனைத்து வயதினரும் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். அதேபோல் நீதிமன்றத்தில் கூறியபடி சமூக இடைவேளையையும் பல கடைகளில் கடைபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர் 
 
இந்த நிலையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மதுக்கடைகளை திறக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தற்போது 5 மணி ஆகிய பின்னரும் ஒருசில இடங்களில் மட்டும் மதுக்கடைகள் மூடுவதற்கு மது பிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல மணி நேரம் கால் கடுக்க வரிசையில் காத்திருந்தவர்களுக்கு மதுவை வழங்கிய பிறகே கடைகளை மூட வேண்டும் என மதுப் பிரியர்கள் வலியுறுத்துவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து டோக்கன் கொடுத்தவர்களுக்கு மட்டுமாவது மது பாட்டில்களை வழங்க வேண்டும் என்று ஒரு சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை அடுத்து மதுக்கடைகளை மூட முடியாமல் டாஸ்மாக் அதிகாரிகள் சிக்கல் உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த சிக்கல் ஒருசில டாஸ்மாக் கடைகளில் மட்டும் தான் என்றும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் சரியாக 5 மணிக்கு மூடப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments