Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் தவித்து வரும் கோவை மக்கள் : 10 மணிக்கு மேல் சேகரிக்க வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்!!!

Advertiesment
குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் தவித்து வரும் கோவை மக்கள் : 10 மணிக்கு மேல் சேகரிக்க வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்!!!

J.Durai

கோயம்புத்தூர் , செவ்வாய், 11 ஜூன் 2024 (13:45 IST)
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. அதில் நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து வருகின்றன. 
 
மேலும் மாநகரில் திறந்த வெளியில் குப்பை கொட்டப்பட்டு வந்தது. அதனை தடுக்கும் விதமாக தரம் பிரிக்கப்பட்டு குப்பைகளுக்கு தீர்வு காண மாநகராட்சி  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வீதிகளில் சாலையோரங்களில் குப்பை வீசும் நபர்கள் மீது அபராத விதித்து நடவடிக்கை எடுத்து வரும் மாநகராட்சி அதிகாரிகள், பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே குப்பைகளை சேகரித்து செல்கின்றனர். ஆனால் ஒரு சில பகுதிகளில் உரிய நேரத்தில் சேகரிக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
இந்நிலையில் சிவானந்தா காலனி, ரத்தினபுரி, பொங்கி அம்மாள் வீதி பகுதியில் கடந்த சில தினங்களாக குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் 10 மணிக்கு மேல் வருவதால், அப்பகுதியில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன.
 
இதுகுறித்து துப்புரவு பணியாளரிடம் கேள்வி எழுப்பிய போது....
 
தாங்கள் பல்வேறு தெருக்களுக்குச் சென்று சேகரித்து வருவதால் 10 மணிக்கு மேல் தான் வர முடியும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இது குறித்த பகுதி பொதுமக்கள் கூறும் போது :- 
 
நாங்கள் காலை 9 மணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய உள்ளதால் 10 மணிக்கு மேல் வரும் தூய்மை பணியாளர்களிடம் வீட்டில் சேர்க்கும் குப்பைகளை அப்புறப்படுத்த முடியவில்லை. தெருக்களில் வீசிச் சென்றால் அபராதம் விதிக்கின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு தூய்மை பணியாளர்கள் முதல் நாள் ஒரு வீதிக்கு 6 மணிக்கு சென்றால், மறுநாள் மற்றொரு விதிக்கு ஆறு மணிக்கு செல்ல வேண்டும் அப்பொழுது தான் அனைத்து வீதிகளிலும் குப்பைகளை சேகரித்துச் முழுமையாக அப்புறப்படுத்த முடியும் என்றனர். 
 
கோவை மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு உரிய தீர்வு கண்டால் மட்டுமே பொதுமக்களின் அவல நிலையை போக்க முடியும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2026 தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக vs பாஜக தான்... திருச்சி சூர்யா பேட்டி..!