Publish Date: Tue, 11 Jun 2024 (13:34 IST)
Updated Date: Tue, 11 Jun 2024 (13:37 IST)
பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவியை கண்டுபிடித்துள்ளதாக அதிமுக ஐடி விங் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக கருவி ஒன்றை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ளதாக அதிமுக ஐடி விங் பிரிவு மண்டல செயலாளர் கோவை சத்யன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்
நாட்டிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் இருக்கிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தாங்கள் கண்டுபிடித்த கருவியை பயன்படுத்தி பாலியல் குற்றவாளிகளை தடுக்க மத்திய அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக புதிய கருவி கண்டுபிடித்துள்ளதாக அதிமுக ஐடி விங் பிரிவு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது