Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீர்ப்பை கேட்டு கதறி அழுத சிறுமி ஹாசினியின் தந்தை

Advertiesment
தீர்ப்பை கேட்டு கதறி அழுத சிறுமி ஹாசினியின் தந்தை
, திங்கள், 19 பிப்ரவரி 2018 (17:41 IST)
தஷ்வந்துக்கு மரண தண்டனை அறிவித்ததை அறிந்து சிறுமி ஹாசினியின் தந்தை மகளின் படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.
 
சென்னையை சேர்ந்த தஷ்வந்த் என்பவன் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 7ம்தேதி, தன்னுடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, சிறுமியின் உடலையும் எரித்து கொலை செய்தான். எனவே அவன் மீது வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கில் இன்று தஷ்வந்துக்கு மரண தண்டனை அறிவித்தது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது தீர்ப்பு வெளியானதும் மொபைலில் தனது மகளின் படத்தை பார்த்து ஹாசினியின் தந்தை கண்ணீர் விட்டு அழுதார்.  

மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எனக்கு நியாயம் கிடைத்து இருக்கிறது. இந்த தீர்ப்பு எனக்கு திருப்தி அளிக்கிறது, அவன் ஒரு மனிதனே இல்லை. என்னுடைய மகளையும் கொன்று, அவனது தாயையும் கொன்றுள்ளான், எனது மகளுக்கு ஏற்பட்டது போல் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்று கூறினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கி திறப்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்போன் திருட்டு: பெரும் பரபரப்பு